தேசிய மட்ட ஆங்கில கட்டுரைப் போட்டியில் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைக்காட்டை சேர்ந்த மேகநாதன் நிவேதிதா சாதனை படைத்துள்ளார்.
முனைக்காடு விவேகானந்தா தேசியப்பாடசாலையில் கல்வி பயிலும் குறித்த மாணவி தேசியமட்ட ஆங்கில கட்டுரைப் போட்டியில் 4ஆம் இடத்தினைபெற்றுள்ளார்,
இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயங்களிலுமிருந்து போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அதற்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்றய தினம் தெஹிவளையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.