வாகனப் பதிவுச் சான்றிதழ் தொடர்பில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தீர்மானம்!!


வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான நீண்ட பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானத்துக்கு அமைய, அண்மைக்கால உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாளரின் தகவல்கள் மட்டுமே இந்த சான்றிதழில் சேர்க்கப்படும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு வாகனம் விற்கப்படும்போது பதிவுச் சான்றிதழில் முன்னைய உரிமையாளர்கள் பலரின் பெயர்கள் இருக்கின்றமையால் கடும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதனையடுத்தே குறிப்பிட்ட காலத்துக்கு முந்திய உரிமையாளர்களின் பெயர்களை வாகனப் பதிவுச்சான்றிதழில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.