வவுணதீவில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சுவிஸ் உதயம் அமைப்பு


கிழக்கு மாகாணத்தில் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பினால் வவுணதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றம் புத்தக பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் வறிய பிரதேச செயலகங்கமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு நாமகள் மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு பாடசாயில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்க உறுப்பினர் அருளானந்தம் வின்சன்ட் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு இன்று பகல் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உபபொருளாளர் விஸ்வலிங்கம் பேரின்பராஜா அவரது பாரியார் மற்றும் அருளானந்தம் வின்சன்ட் அவர்களின் சகோதரி, சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் பொருளாளர் அக்கரை பாக்கியன்,பாடசாலையின் அதிபர் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலையில் மிகவும் வறிய நிலையில் உள்ள 72மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களுடனான் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது குறித்த பாடசாலையில் மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவனின் நலனை கருத்தில்கொண்டு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உபபொருளாளர் விஸ்வலிங்கம் பேரின்பராஜா அவர்களினால் நிதியுதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.