யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்தின் பின்னர், ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாண பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.