தோட்டப்பாடசாலைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய இலண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்


பதுளை மாவட்டத்தின் தெல்வத்தை பகுதியில் உள்ள ஐந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உதவிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.

இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அகிலன் பவுண்டேசன் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இது தொடர்பான நிகழ்வு தெல்வத்தை பாடசாலையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் அகிலன் பவுண்டேசன் தலைவரும் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பரிபாலசபை தலைவருமான சமூகசேவகர் மு.கோபாலகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனின் இணைப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக தோட்டப்புற மாணவர்கள் கற்றல் உபகரணங்களை வாங்குவதில் பெரும் நெருக்கடி நிலைமையினை எதிர்கொண்டுவரும் நிலையில் குறித்த பகுதி மாணவர்களுக்கு உதவுமாறு இராஜாங்க அமைச்சர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் வறிய மாணவர்களுக்கான கல்விக்கான உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.