கிழக்கு மாகாண ஆளுனராக செந்தில் தொண்டான் சத்திய பிரமாணம் வடமாகாண ஆளுனர் சார்ள்ஸ்


வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று (17.05.2023)  புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்வும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.