வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று தன்சல்!!


வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று தன்சல் வழங்கப்பட்டது.

241ஆம் காலாற்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் எல்.எஸ்.டி.என்.பத்திரணத்ன தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சௌவரிசி தன்சல் நிகழ்வில் பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று சித்திரா பௌர்ணமி தீர்த்தோற்சவம் இராணுவ முகாமின் அருகில் உள்ள கடலில் இடம்பெற்ற நிலையில் தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்ட இந்துக்களும் தன்சலில் கலந்து கொண்டமை இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது.

இதேநேரம் வாகனங்களில் பயணித்தவர்களையும் நிறுத்தி தாகசாந்தி வழங்கப்பட்டது.

வருடந்தோறும் அக்கரைப்பற்று 241ஆம் காலாற்படைப்பிரிவினர் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வி.சுகிர்தகுமார்)