தமிழ்-சிங்கள சித்திரை புத்தாண்டில் மாமாங்கேஸ்வரத்தில் வழிபாடு

மலர்ந்திருக்கும் சோபகிருது புத்தாண்டை முன்னிட்டு, இன்று நாடளாவிய ரீதியாக உள்ள கோவில்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சித்திரை வருட புத்தாண்டு நாளான இன்றைய தினம் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு- சோபகிருது வருடப்பிறப்பு இன்று பிற்பகல் 2.03மணிக்கு பிறந்தது.

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.