அரசடி மஹா பெரியதம்பிரான் ஆலய புனரமைக்கு உதவிய இலண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம்


வடகிழக்கில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் அகிலன் பவுண்டேசன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அகிலன் பவுண்டேசன் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் அரசடி மஹா பெரியதம்பிரான் ஆலயத்தின் நிர்மாணப்பணிக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் ஆலயத்தின் மூலஸ்தானத்தினை முழுமையாக புனரமைப்பதற்கான நிதியுதவியை இலண்டனில் உள்ள வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியுள்ளது.

அகிலன் பவுண்டேசன் ஊடாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பான நிகழ்வு இன்று ஆலயத்தில் நடைபெற்றது.

ஆலயத்தின் தலைவர் நவரெட்னகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகிலன் பவுண்டேசன் தலைவரும் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய பரிபாலசபை தலைவருமான சமூகசேவகர் மு.கோபாலகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அகிலன் பவுண்டேசனின் இலங்கைக்காக இணைப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சிறப்பு  பூஜைகள் நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு பல இலட்சம் ரூபாவினை வழங்கி புனரமைப்பு பணிக்கு உதவிய மு.கோபாலகிருஸ்ணன் மற்றும் வி.ஆர்.மகேந்தரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.