நளீர் பௌண்டஷன் அமைப்பின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு வசதிகுறைந்த தேவையுடைய மக்களுக்கு பத்து வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் முதலாவது வீட்டை கையளிக்கும் நிகழ்வும், இரண்டாவது வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் நளீர் பௌண்டஷன் ஸ்தாபகர் ஏ.எம். நளீரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நளீர் பௌண்டஷன் தலைவர் எம்.ஏ. ரஹீம் தலைமையில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலிய சிட்னி பிரதர்ஸ் நிதியனுசரணையில் சாளம்பெங்கேணி நான்கில் அமைக்கப்பட்ட இந்த வீட்டை கையளிக்கும் நிகழ்விலும், சாளம்பெங்கேணி மூன்றில் அமைக்கப்பட உள்ள வீட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்விலும், அம்பாறை அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீட்டின் உரிமையாளர்களிடம் வீட்டை கையளித்தார். இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பீ. பிரணவரூபன் அவர்களும், விசேட அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே. றிஸ்வி யஹசர் அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் நளீர் பௌண்டஷன் அமைப்பின் செயலாளர் ஏ.எல். றிஸான், பொருளாளர் எம்.சி. பயாஸ், உப தலைவர் ஏ.எல்.எம். நௌபர் உட்பட நிர்வாகிகள், அங்கத்தவர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(நூருல் ஹுதா உமர்)






