மாத்தறை– பம்புரன புகையிரத நிலையத்துக்கு அருகில் சிறுமியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் நேற்றுமாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளார்
11 ஆம் தரத்தில் கல்வி பயின்றுவந்த, ஹீன்தெடிய, பென்தொடகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது நண்பிகள் மூவருடன், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், தண்டவாளம் வழியாக நடந்துசென்றபோது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
