போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வைப்பு!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்வு ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட செங்கலடி மற்றும் பதுளை வீதியை அண்டிய பகுதிகளில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு நிலையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஒழுங்கு படுத்தலில் இன்று 21.03.2023 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"போதையற்ற நாடு சௌபாக்கியமான தேசம்" எனும் தொனிப் பொருளில் பாதசாரிகள் மற்றும் வீதியால் செல்லும் வாகனங்களில் ஸ்ட்டிக்கர் காட்சிப்படுத்தல் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகாரி கேணல் லால் கெதர, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.இராசலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பீ.தினேஸ், மாவட்ட செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் வீ.ஜெகன், ஏறாவூர் பற்று பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் எஸ்.கார்த்திக் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.