வெல்லாவெளி பிரதேசத்தில் சிறு போக நெற் பயிர்ச் செய்கை ஆரம்பக் கூட்டம்!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் இவ்வாண்டுக்கான (2023) சிறுபோக நெற்பயிர்ச் செய்கை தொடர்பான ஆரம்பக் குழுக்கூட்டம் அண்மையில் பிரதேச செயலாளர் திருமதி.ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சுமார் 16,466 ஏக்கர் நிலப் பரப்பில் இம்முறை வெல்லாவெளி பிரதேசத்தில் சிறுபோக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக BG300, AT307, AT308, BG360, BG356, BG357, BG377, AT 362 மற்றும் LD365 ஆகிய ஒன்பது வகை இன விதை நெல்லை விதைப்பதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இவற்றிற்கான விதைப்புக் காலமாக 2023.03.20 முதல் 2023.03.30 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியிலாளர் என். நாகெரத்தினம், உதவிப் பிரதேச செயலாளர், நவகிரி நீர்ப்பாசனப் பொறியியலாளர், கரடியனாறு விதை மற்றும் விதை நடுகைகள் அபிவிருத்தித் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநல காப்புறுதிச்சபை உதவிப் பணிப்பாளர் உட்பட ஏனைய திணைக்கள அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.