பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்!!


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, 167 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று சிறைச்சாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.