நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி ஒரு வார காலத்துக்கு அரசு நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டிடங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 4ஆம் திகதி 75ஆவது சுதந்திர தின விழாவின் சிறப்பு கருதி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை தேசியக் கொடி ஏற்றப்படும்.
பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு இது தொடர்பான சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர் களுக்கு உரிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
