QR குறியீட்டு முறையை அடுத்த மாதம் முதல் நீக்குவது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இது தொடர்பாக கூறப்பட்ட கூற்றுகளை அமைச்சர் ட்விட்டரில் மறுத்துள்ளார்.
எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரை QR முறை தொடரும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு டொலர் கையிருப்பு இல்லாததால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து ஒகஸ்ட் மாதம் தேசிய எரிபொருள் QR குறியீடு முறை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
QR குறியீட்டு முறையின் கீழ் தனிநபர்கள் வாரத்தில் கிடைக்கும் எரிபொருள் விலையை முழுவதுமாகப் பெறலாம் அல்லது வாரத்தின் போது படிப்படியாக ஒதுக்கீட்டைப் பெறலாம்.
தற்போது அனைத்து நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையின் கீழ் மாத்திரமே எரிபொருளை விநியோகிக்கின்றன.
