உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு அச்சமின்றி வாருங்கள் புஸ்பலிங்கம் தவிசாளர் பொதுமக்களுக்கு அழைப்பு! காணொளி இணைப்பு

 பொன்.நவநீதன்

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்ப்பட்ட மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் இன்றைய தினம் (13) சிரமதானபணிகள் முன்னெடுக்கப்பட்டது. 

 இதன்போது பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் கருத்து தெரிவிக்கையில் கார்த்திகை 27 அன்று உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்வதற்கு பொதுமக்களை அச்சமின்றி வாருங்கள் என அழைப்பினை விடுத்தார். 





மேலும் கருத்து தெரிவிக்கையில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லமானது பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்டது. 


கார்த்திகை 27ம் திகதி அன்று வருடா வருடம் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வருகின்றோம். 

இன்றைய தினம் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகளை முன்னெடுக்கிறோம் ஆகவே எதிர்வரும் கார்த்திகை 27திகதி அன்று அனைத்து பொது மக்களும் அச்சம் இன்றி வாருங்கள் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு என தெரிவித்தார்.