மகுடம் பதிப்பகத்தின் 65 வது வெளியீடான ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவான் அவர்களது புதிய பத்துப்பாட்டு கவிதை நூல் இம் மாதம் 26ம் திகதி (26 -11-2022 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு) திருகோணமலையில் கவிஞரின் இல்லத்தில் வெளியீடு காண்கிறது.
கடந்த ஜூலை மாதம் 24 ம் திகதி கவிஞரின் 90 வது வயது பூர்த்தியானதை முன்னிட்டு அவரது பிறந்த தின பரிசாக வெளிவரவுள்ள இந்நூலில் கவிஞரின் முதல் கவிதை நூலான #கீறல்கள் (வடகிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்றது - 1990 - தாகம் பதிப்பக வெளியீடு ) உட்பட பத்துக் கவிதை நூல்களின் தொகுப்பாக இது மலர்கிறது.
திருகோணமலையின் அடையாளங்களில் ஒருவரான ஈழத்தின் மூத்த கவிஞர் தாமரைத்தீவானை கொண்டாடுவோம் வாருங்கள்.
