மட்டக்களப்பு- சித்தாண்டியில் குளிர்காயும் போது தீப்பற்றி வயோதிபப் பெண் மரணம்!!


கடும் குளிர் காரணமாக தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர் தீப்பரவி உயிரிழந்துள்ள சம்பவமொன்று (22) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவர் சட்டி ஒன்றில் தேங்காய் மட்டைகளை கொண்டு தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்த போது அப் பெண்ணின் உடலில் தீ பரவியுள்ளது.

இவ்வாறு தீ காயங்களுக்குள்ளான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.