(புருசோத்)
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள வீதிகளுக்கு பெயர்ப்பலகைகள் இடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரா.கோபாலசிங்கம் அவர்களின் தலைமையில் அமரத்துவம் அடைந்த இராசநாயகம் மேரிநாயகி குடும்பத்தினர் மற்றும் ஜோர்ஜ் அன்ரன் அவர்களின் முழு அனுசரணையுடன் இந்த வீதிப்பெயர்ப்பலகை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் உள்ள ஜோர்ஜ் வீதியில் இருந்து ஆரம்பமாகி கிராமத்தின் தெற்கு எல்லையில் உள்ள மதுரம் வீதி வரை நடப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞர்.யோகநாதன், உதவி உள்ளுராட்சி ஆணையாளர் பிரகாஸ், பிரதேச சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை செயலாளர் ,மற்றும் அதிகாரிகள், கிராமத்தில் உள்ள ஆலய வண்ணக்கர். விளையாட்டு கழகங்கள் கோவில் தலைவர்கள், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


.jpeg)
.jpeg)

