மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 44 மாணவர்களுக்கு 9 ஏ சித்தி!!


கடந்த 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையை சேர்ந்த 44 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதாக, அப்பாடசாலை அதிபர் திருமதி. தவத்திருமகள் உதயகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, 19 மாணவர்கள் 8 ஏ, 11 மாணவர்கள் 7 ஏ, 15 மாணவர்கள் 6 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த 25ஆம் திகதி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.