இன்று மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதேபோன்று உயர்தரப்பரீட்சையில் கனிசமான மாணவர்கள் பல்கலைக்கழக தகுதிபெற்றுள்ளதுடன் உயிரியல் விஞ்ஞான துறையில் அகில இலங்கை ரீதியில் மிக்கேல் கல்லூரி மாணவன் துவாரகேஸ் அவர்கள் முதல் இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சிக்குரியதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2021ஆம் ஆண்டு கா.பொ.த.சாதாரண பரீட்சையின் பெறுபேறு கடந்த 25ஆம் திகதி வெளியாகிய நிலையில் அந்த பெறுப்பேற்றின் அடிப்படையில் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட புள்ளிபகுப்பாய்வின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயமானது 87வீத சித்தியினைப்பெற்று அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள நூறு கல்வி வலயத்தில் சாதாரண தர பரீட்சையில் உயர்தரத்திற்கு தகைமைபெறுகின்ற மாணவர்களை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட புள்ளி பகுப்பாய்வின்படி மட்டக்களப்பு கல்வி வலயம் முதல்இடத்தைப்பெற்றுள்ளது.
இந்த இடத்தினை அடைவதற்கு உழைத்த அதிபர்கள்,பிரதி அதிபர்கள்,பாடவிதானத்திற்கு பொறுப்பான பகுதி தலைவர்கள்,அர்ப்பணிப:புடன் சேவையாற்றிய ஆசிரியர்கள்,அனைத்துக்கும் மேலாக பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,பாட உதவிகல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,விசேட நிபுணத்துவமிக்க வளவாளாகள் அனைவருக்கும் இந்த வெற்றியை பகிர்ந்துகொள்வதுடன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு கல்வி வலயமானது 2018ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியான தரப்படுத்தலின்போது அகில இலங்கையில் 55வது இடத்தினைப்பெற்றிருந்தது.2019ஆம் ஆண்டு 45வது இடத்தினையும் 2022ஆம்ஆண்டு இலங்கையில் 17வது இடத்தினையும் 2021ஆம் ஆண்டு முதல் இடத்தினையும் பெற்றுள்ளது. கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சியை கண்கூடாக காண்கின்றோம்.
2019ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட கஸ்டமான நிலைமைகள் 2020,2021ஆம் ஆண்டுகளில் நாடு எதிர்நோக்கிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் தமது கல்வியினை சிறப்பாக தொடர்ந்திருக்கின்றார்கள்.இதற்கு எமது கல்வி வலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல விசேட செயற்றிட்டங்கள் மாணவர்களுக்கு உறுதுணையாகயிருந்துள்ளது.வித்தியா வசந்தம் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மாணவர்களை கற்பிப்பதற்கு தூண்டியதுடன் எமது வலய கல்வி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட தொலைக்கல்வி,ஊடகங்கள் மூலமான கற்பித்தலானது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்துள்ளது.
அதுமட்டுமன்றி பாடசாலைகளுக்கு கட்டம்கட்டமாக நாங்கள் வைத்த பயிற்சி பரீட்சைகள் மூலமாகவும் அவர்களை பாடசாலைகளுக்கு சென்று தட்டிக்கொடுத்ததன் காரணமாகவும் இநத பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதுமட்டுமன்றி மாகாண கல்வி பணிப்பாளரினால் மாணவர்களுக்கு சிறுகுறிப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தது.இதேபோன்று இடர்காலங்களுக்கு பொருத்தமான வகையில் கையேடுகள்,செயலட்டைகளும் மாணவர்களுக்கு மாகாண கல்வி பணிப்பாளரினால் வழங்கப்பட்டிருந்தது.வீட்டிலிருந்து கற்ககூடியவாறு இவை வழங்கப்பட்டது எமது வெற்றிக்கு உறுதுணையாகயிருந்தது.
2020 ஆம் ஆண்டு கா.பொ.சாதாரண பரீட்சை பெறுபேறின் அடிப்படையில் 08வது இடத்திலிருந்து கிழக்கு மாகாணம் 2021ஆம் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 04ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்திற்கு எமது கல்வி வலயம் பங்களிப்பு செய்துள்ளது.
2021ஆம் ஆண்டு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு வெற்றிகரமான ஆண்டாக இருக்கின்றது.குறிப்பாக ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் 100 கல்வி வலயங்களில் இரண்டாம் இடத்தினைப்பெற்றிருந்தோம்.அதேபோன்று சாதாரண தர பரீட்சை பகுப்பாய்வின் படி முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளோம்.உயர்தர பரீட்சையில் கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப்பெற்றுள்ளதுடன் உயிரிய விஞ்ஞான துறையில் புனித மிக்கேல் கல்லூரி மாணவன் துவாரகேஸ் அகில இலங்கையில் முதலிடத்தைப்பெற்றதையும் மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்தவிரும்புகின்றேன்.