தம்பிலுவில் பாடசாலையில் மோதலில் 13 வயது சிறுவன் பலி!

அம்பாறை  தம்பிலுவில் பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது குறிப்பிடத்தக்கது