புனித மிக்கேல் கல்லூரியின் 149வது கல்லூரி தின நிகழ்வும் கல்லூரியின் 150வது ஆண்டு ஆரம்ப நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் அனைத்து சமூகங்களுடன் ஒன்றித்து செயற்படுகின்ற கல்லூரி தினம் இன்று மிக கோலாகலமாக கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் புனித மிக்கேல் கல்லூரியின் 149 ஆவது ஆண்டு கல்லூரி நிறைவு தினத்தையும் கல்லூரியின் 150வது ஆண்டு ஆரம்ப நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும் ,கல்லூரி போசகருமான கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு 150வது ஆண்டு நிகழ்வுகளுக்கான நினைவு பதாகை ஆயர் மற்றும் கல்லூரி அதிபரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
கல்லூரி முன்றலில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து கல்லூரி கொடிகள் ஏற்றப்பட்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி ஸ்தாபக அருட்தந்தை பேடிநல் பொநல் அடிகளாரின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு கல்லூரியின் 150வது ஆண்டு நிகழ்வு தூபிக்கான அடிக்கல்லும், கல்லூரி சுற்றுமதிலுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது .
இன்று இடம்பெற்ற புனித மிக்கேல் கல்லூரியின் 149 கல்லூரி தினம் மற்றும் கல்லூரி 150வது ஆண்டு ஆரம்ப நிகழ்வுக்கான நிகழ்வுகளில் கல்லூரி பழைய மாணவர்களான இயேசு சபை துறவிகள் , கல்லூரி பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.










.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
