18 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமனம்!!


மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக பிரதமர் தினேஷ் குணவர்தனவிடமிருந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பி.எம். சாகர காரியவசம் ஆகியோரும் இந்த நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

இதன்படி, 18 மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நியமனக் கடிதங்களைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபரம்.

1. கொழும்பு – பிரதீப் உடுகொட

2. கம்பஹா – சஹான் பிரதீப் விதான

3. களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

4. காலி – சம்பத் அத்துகோரல

5. மாத்தறை – நிபுன ரணவக்க

6. ஹம்பாந்தோட்டை – சமல் ராஜபக்ஷ

7. குருநாகல் – சமந்திர ஹேரத்

8. புத்தளம் – சிந்தக மாயாதுன்னே

9. அனுராதபுரம் – எச்.நந்தசேன

10. கண்டி – குணதிலக ராஜபக்ஷ

11. மாத்தளை – நாலக பண்டார கோட்டேகொட

12. நுவரெலியா – எஸ்.பி. திஸாநாயக்க

13. பதுளை – சுதர்சன் தெனிபிட்டிய

14. மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

15. இரத்தினபுரி – அகில எல்லாவல

16. கேகாலை – ராஜிகா விக்கிரமசிங்க

17. திகாமடுல்ல – டி. வீரசிங்க

18. திருகோணமலை – கபில அத்துகோரல