சிறகுகள் புத்தக சேகரிப்பு மாதம் ஆரம்பம்!!


சிறகுகள் அமையம் ஊடாக ஆரம்பிக்கப்படும் நூலகங்களுக்கான புத்தகங்களை சேகரிப்பதற்கான ஒரு மாத கால செயற்றிட்டம் சிறகுகள் செயற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிய புத்தங்கள் மற்றும் பயன்படுக்கூடிய பாவனை நிலையிலுள்ள புத்தகங்களை வழங்க முடியும். நீங்கள் வழங்கும் ஒரு புத்தகம், ஆரம்பிக்கபடவுள்ள நூலகத்திற்கு முதற்புள்ளியாக அமையும்.

இந்த மாதத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தக சேகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு புத்தகங்கள் சேகரிக்கப்படும்.

நீங்கள் புத்தகங்கள் வழங்க
+94 76 370 1961 
+94 76 331 2368
+94 76 030 4661
இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பிரதேச நூல் சேகரிப்பு நிலைய விபரத்தினை அறிய முடியும்.

உங்கள் வீடுகளில் தேங்கியிருக்கும் புத்தகங்கள், ஒரு சமூக எழுச்சிக்கு வலுச்சேர்க்கட்டும்! மேலும் தங்கள் பிறந்த தினம், திருமண நாள், நினைவு திங்கள் போன்ற நிகழ்வுகளின் நினைவாகவும் ஒரு நூலகத்திற்கான நூல்களை வழங்க முன்வாருங்கள்.