கல்முனையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மட்டு கல்முனை பிரதான வீதியால் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று மட்டு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த போது விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,
கல்முனையிலிருந்து 5 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியின் தூக்க கலக்கத்தினாலே இவ் விபத்து சம்பவித்திருக்கிறது.
இவ் முச்சக்கர வண்டி கிரான்குளம் புதுக்குடியிருப்பை அண்மித்த பகுதியால் பயணிக்கும் போதே வீதியை விட்டு விலகி மின்சார தூணுடன் மோதுண்டு குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் 3 பேர் காயமடைந்ததுடன் அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்தவர்களால் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து செல்கின்றனர்.




