8.5 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!


8.5 கிலோகிராம் கஞ்சாவுடன் யாழ் நகரில் நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்கு கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.