திருகோணமலை- மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க பிரதான அலுவலகத்தில் நிரப்பப்பட்ட மண்ணெண்ணெய்களுடன் வைக்கப்பட்டிருந்த 11 மண்ணெண்ணெய் பரல்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் குறிப்பிட்டனர்.
திருகோணமலை பிராந்திய போதை ஒழிப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அவர்கள் வருகைதந்து சோதனை செய்தபோது மூதூர் பலநோக்கு கூட்டுறவுச் சங்க அலுவலக வளாகத்திலிருந்து நிரப்பப்பட்ட மண்ணெண்ணெய் பரல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது அனைத்து மண்ணெண்ணெய் பரல்களும் ஏற்றப்பட்டு மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
