100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை!!


100,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒக்டோபர் மாதம் உரம் கையிருப்பு நாட்டிற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 15 ஆம் திகதி பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் விவசாய அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் மிகுதியுள்ள யூரியா உரத்தை பருவத்தின் தொடக்கத்தில் அறுவடை தொடங்கும் பகுதிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.