வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல்!!


“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் நாள் போராட்டம் (03.08.2022) புதன் கிழமை இன்று திருகோணமலை மாவட்டத்தில் ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

இப் போராட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனக் கோரி நடைபவணியாக வருகைதந்து மைதானத்தில் கூடியிருந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அத்துடன் அடுத்தகட்ட போராட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கரத்துரை பற்றில் நாளை (04.08.2022) வியாழக் கிழமை காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.