100 நாட்கள் செயல்முனைவின் 06 ஆவது நாள் போராட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் ஆறாவது நாள் போராட்டம் இன்று (06.08.2022) சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றது.
இப் போராட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினைச் சேர்ந்த தழிழ் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர், செயற்பாட்டாளரகள்; என 200 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை வேண்டி நின்றனர்.
07ம் நாள் போராட்டமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேசத்தில் நாளை (07.08.2022) ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நன்றி
சேவையிலுள்ள
திரு.க.லவகுசராசா,
ஒருங்கிணைப்பாளர்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு,
06 ஆவணி 2022.