100 நாட்கள் செயல்முனைவின் 04 ஆவது நாள் போராட்டம் முல்லைத்தீவு. மாவட்டத்தில் நடைபெற்றது.
“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் நான்காம் நாள் போராட்டம் இன்று (04.08.2022) வியாழக் கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
இப் போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த தழிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர்,செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை வேண்டி நின்றனர்.
மற்றும் 05ம் நாள் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காந்தி பூங்காவில் நாளை (05.08.2022) வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.
நன்றி
சேவையிலுள்ள
திரு.க.லவகுசராசா,
ஒருங்கிணைப்பாளர்,
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு,
04 ஆவணி 2022.










