மட்டக்களப்பில் Litro கேஸ் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!


மறு அறிவித்தல் வரை மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏராவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, வாகரை, நாவலடி, ஆகிய பிரதேசங்களுக்கு எந்தவித கேஸ் விநியோகமும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஏற்கனவே கேஸ் விநியோகம் செய்த இடத்தில் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இனி வரும் காலங்களில் கேஸ் வழங்கப்பட்டாலும் ஏற்கனவே வழங்கிய பொது இடங்களில் கேஸ் வழங்கப்பட மாட்டாது. மாறாக வேறு சில பொது இடங்களிலேயே கேஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.