குடியேற்றவாதம், வர்த்தகம், கிறிஸ்தவ மதத்தை பரப்புதல் என்ற காரணிகளின் விளைவாக இந்தியாவுக்கு வந்த மேலைநாட்டினர், காலனித்துவ நாடுகள் அவர்களின் சட்டத்தில் ஆள வேண்டும் என்பதும் அவர்களது மொழியை கற்று இந்திய மக்களின் பாரம்பரிய சட்டங்களையும் சமூக வரலாறுகளையும் அறிந்துகொண்டு அவற்றை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் இடைநிலை நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் கற்பிக்க வேண்டிய அவசியம் காணப்பட்டது. இதனால் சமஸ்கிருத பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், ஆரிய வாதம் முதலிய பல காரணிகள் மேலை நாட்டினரை இந்தியவியல் தொடர்பான ஆய்வுகளுக்கு வித்திட்டது.
ஜேர்மனியில் 1837 ஜூலை 19 ஹனோவர் மாநிலத்தில் போஸ்ரர் என்ற இடத்தில் பிறந்தார். மொழி பிறப்பியல் பாரம்பரிய மொழியியலில் ஆழமான ஈடுபாடு உடையவர் இதற்காக சமஸ்கிருதம் பாரசீகம் ஆர்மீனியா ஆகிய மொழிகளையும் கற்றார். இடைநிலைக் கல்வியை ஜிம்னேசியம் எனப்படுகின்ற ஜேர்மனிய அரச கல்விக் கூடத்தில் பயின்ற புல்ஹர் கொரிங்கன் பல்கலைக்கழகத்தில் கற்றார். தனது கலாநிதிப் பட்டத்தை கிரேக்க இலக்கணம் பற்றி ஆய்வு செய்து தனது 21ஆவது வயதிலேயே கலாநிதிப் பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
சுவடிகள் சேகரிப்பு பணி
ஏட்டுச் சுவடிகளின் சேகரிப்பில் புல்ஹர் கொண்டிருந்த ஆர்வமானது இந்திய பண்பாட்டின் சிறப்பை மேலைத்தேய ஆய்வாளர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதில் முக்கிய இடம் வகித்தது. ஏட்டு சுவடிகளை சேகரிப்பது தொடர்பில் இவர் கொண்டிருந்த ஆர்வத்தை தனது வாக்குமூலமாக பின்பவருமாறு குறிப்பிடுகின்றார்.
' இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தியாவில் கால் பதித்த போது இந்தியப் பண்பாடுட்டு வரலாற்றையும் சமஸ்கிரு மொழி பிறப்பின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு மிகவும் பயன்படக்கூடிய இத்துறைகளில் ஆய்வாளர்கள் எதிர்நோக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வளிக்கக்கூடிய அநேக ஓலைச்சுவடிகளை சேகரித்து நூலுருவாக்கி வெளியிட முடியும் என்ற அந்த ஒரே ஒரு எண்ணம் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது'.
அந்த வகையில் 1863ல் பம்பாயின் கல்விச் சேவையில் இணைந்த இவர் 1863 தொடக்கம் 1866 இடைப்பட்ட காலத்தில் தனது அயராத முயற்சியால் ஏறக்குறைய 200 ஏட்டுச் சுவடிகளை சேகரித்து இருந்தார். 1866- 67 காலப் பகுதியில் தனது சுவடி சேகரிப்பு வேட்டையினை மேலும் தீவிர படுத்திய இவர் இந்தியாவின் தெற்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு கர்நாடக பிரதேசங்கள் அதிகளவான சுவடிகளை சேகரிக்க இயலும் என்ற தகவலை அறிந்து அப்பகுதிகளை சென்று தீவிரமாக பணியில் ஈடுபட்டார் ஒரு வருடத்திற்குள்ளான இக்குறுதிய காலப் பகுதியில் இவரால் மேலும் 200க்கும் அதிகமான சுவடிகள் சேகரிக்கப்பட்டன. வேத இலக்கியங்கள், வேத இலக்கணம் பற்றிய மிக முக்கியமான அதிக சுவடிகள் இக்காலபோதில் சேரிக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடபாலது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிகள் யாவும் இவரால் எல்பின்ஸ்டொன்ற் கல்லூரியில் பாதுகாப்பாக ஆவணப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 1868 இல் இவர் அரசாங்க இயந்திரத்திற்கு சுவடிகளை தேடி சேகரிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்திட்டம் ஒன்றை பரிந்துரைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் பான் இந்தியா எம். எஸ். எஸ் தேடல் திட்டம் (pan Indian MSS Search project) என்ற பெயரில் அத்திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தில் இவர் மிகுந்த உத்வேக செயற்பாடாக தொடர்ந்து பங்கெடுத்தார். இந்தியாவில் இதுவரையில் எந்த வெளிநாட்டவராலும் நுழைய முடியாத குகைகளிலும் மடங்களிலும் வழிபாட்டுத் தலங்களிலும் இவர் தனி மனிதனாக அனுமதி பெற்று நுழைந்து சென்று சாதுக்களையும் பண்டிதர்களையும் சந்தித்து பெறுமதியான மேலும் பல சுவடிகளை சேகரித்தார். குறிப்பாக ஜைன மத துறவிகள் வாழும் குகைகளினுள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவரே ஆவார். அந்த வகையில் சுவேதாம்பர ஜைனர்களுடைய பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது பல சாஸ்திரங்கள் , காஷ்மீரில் உள்ள ரிஷிகளிடம் பெற்றுக்கொண்ட வேத இலக்கியங்கள் சார்ந்த சுவடி திரட்டுகள் ஆகியவற்றை இவருடைய சாதனைப் பயணத்தின் சாட்சிகளாக குறிப்பிட இயலும். இவரால் பேர்ளினுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஜைனம் தொடர்பான பிடாகிறது சுவடிகளே ஜைனம் பற்றிய ஆய்வுகளை மேற்குலக முன்னெடுக்க வகை செய்தது.
இவர் இந்தியாவை விட்டு புறப்பட்ட சமயத்தில் 2300 மேற்பட்ட எட்டு சுவடிகளை அரசாங்க ஆவணக் காப்பகத்தில் சேர்த்திருந்தார். இவ் சுவடிகளை அவர் பெறுவதற்கு இந்திய சமயங்கள் மீது அவருக்கு இருந்த மரியாதையும் சமஸ்கிருத மொழிகயில் கொண்டிருந்த ஆழ்ந்த புலமையும் பிரதான காரணமாயின. ஏனெனில் சைவ வைதிக தலைவர்களும் அவைதீக மதப் பெரியோர்களும் தம்முடைய பொக்கிஷங்களைப் போல பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த தத்தமது சமய ஏடுகளை வேற்றுநாட்டவரிடம் எந்த சந்தர்ப்பத்திலும் கையளிக்க தயாராக இல்லை. எந்த விலைக்கு அவற்றை விற்பதற்கோ படியெடுப்பதற்கோ ஏன் ஒரு முறை காண்பிப்பதுது கூட பாவம் என்ற நிலைப்பாட்டில் இருந்த புனித சுவடிகளை அவை கருதப்பட்டன.
இவ்வாறு அரும்பாடுபட்டு பெற்ற சுவடிகளை படியேறிப்பதற்கான பொருட்செலவும் அதிகமாய் இருந்தது. அரசாங்கத்தினால் 1866 திட்டம் ஆரம்பிக்கப்படும் வரையில் இவர் தனது சொந்த பணத்தில் சுவடிகளைப் படி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரால் காஸ்மிரில் அதர்வேதத்தின் 19 ஆம் காண்டத்துக்கு உரிய பதவாடம் 1870 - 71 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிரீச் பட்டைகளில் எழுதப்பட்ட ரிக்வேத சங்கிதைகள் (இது இன்று யுனெஸ்கோவின் 159 ஆவது பதிவு எண்ணாக இடம்பெற்றுள்ளது ) மகாபாரதம், இராஜ தரங்கினி, சாகுந்தலம், தந்திர சாரம், பாகவத புராணத்தின் பத்தாம் காண்டம் பாரசீக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த ராஜதரங்கினி ஆகிய சுவடிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்வாறாக புல்ஹர் இந்தியாவில் சுகடிகளை சேகரித்து அவற்றை பேணி ஆவணப்படுத்தியதன் ஊடாக இந்தியாவில் தொடர்பான ஆய்வுக்கும் இந்திய பண்பாடுட்டு வரலாற்றை அறியவும் அடிப்படையாக அமைந்தது.
பொ.கோகிலன்.
இந்து நாகரிகத்துறை சிறப்பு கற்கை மாணவன்,
கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமுலை,
இலங்கை.
