கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புபெற்ற மட்டக்களப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோயில் இவ்வருட மகோற்சவம் தொடர்பான மகாசபை கூட்டம் ஆலய வன்னியனார் சிவ வடிவேல் பாலச்சந்திரன் வன்னிமை தலைமையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இறை வழிபாட்டுடன் ஆரம்பமான மகாசபை கூட்டம் சென்ற வருடம் ஆலயத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகள் அதோடு இணைந்த செலவுகள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டது.
அதன் பின்னர் இவ்வருடத்துக்கான மஹோட்சவம் எதிர்வரும் 26.08.2022 ஆரம்பமாகி 10.09.2022 அன்றைய தினம் உதயன்மூலையில் அமைந்துள்ள பிரணவ தீர்த்தத்துடன் நிறைவடைய உள்ளது.
ஆலயத்தில் இடம்பெறுகின்ற 16 நாட்கள் கொண்ட குடி வழமையுடைய திருவிழாக்கள் ஆலயத்தில் இம்முறை சிறப்பாக இடம் பெறுவது தொடர்பாக பல்வேறுபட்ட முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆலய வன்னிமை கூடி திருவிழா தலைவர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு மகா சபை கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஆலய மகோற்சவம் தொடர்பான மகாசபைக் கூட்டத்தில் ஆலயத்தின் வன்னிமை மற்றும் முன்னாள் வண்ணக்குமார்கள் அத்துடன் குடிமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.