புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு!!


2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

மேற்படி திருத்தப் பணிகள் ஓகஸ்ட் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 45 மையங்களில் நடைபெறவுள்ளன.