கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னொன் (David Mckinnon) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பு இன்று (07) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.