மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!!


எரிபொருள் தட்டுப்பாட்டினை முகாமை செய்யும் பொருட்டு விசேட பொறிமுறை ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் கையாளுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், இராணுவ மற்றும் பொலீஸ் உயர் அதிகாரிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது முன்னுரிமையின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எரிபொருள் வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறாத வண்ணம் ஒன்லைன் நடைமுறைகளை கையாளுதல் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.