சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை 48 மணித்தியாலங்களுக்கு சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு வசதியை ஒத்திவைக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் பொது நிர்வாக அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த பரிசீலனைக்குப் பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 113 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதாரப் பணியாளர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு விசேட வசதி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.