எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு!!


ஜூலை மாதத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்றைய தினம் (30ஆம் திகதி) எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று தீவை வந்தடைந்ததாகவும், அதன் தரையிறங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இன்று (31ஆம் திகதி) இரவு மற்றுமொரு எரிவாயு கப்பல் தீவை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.