இந்துமா சமுத்திரத்தின் மத்தியில் முத்தெனத் திகழ்கின்ற ஈழமணித் திருநாட்டின் இயற்கை எழில்கொஞ்சும் கிழக்கிலங்கையில் மீன்மகள் பாடும் தேனகமாம் மட்டுமா நகரின் வடபால் செந்நெல் வயலும் செந்தமிழ் மரபும் கனிகளோடு கறவை இனப்பாலும் ஒருங்கே அமையப்பெற்ற, நல்விருந்தோம்பும் சீரிய சைவர்குலம் வாழும் நலன்மிகு பழம்பதியாம் வந்தாறுமூலை தனில் பன்நெடுங் காலமாக கோவில் கொண்டு அடியார்கள் குறை தீர்த்து வேண்டும் வரங்களை வாரி வழங்கி சிலம்பொலி தந்து உலகையே வியக்கவைத்த வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திப் பெருவிழா நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் வைகாசி 26ம் நாள் 09.06.2022 வியாழக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் வைகாசித் திங்கள் 30ம் நாள் 13.06.2022 திங்கட்கிழமை திருக்குளிர்த்தியுடன் இனிதே நிறைவடையவுள்ளது.