வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை அருள்மிகு ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிசேகப்பெருவிழாவின் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

சீர்பாத குல மக்களின் குல தெய்வமாக கருதப்படும் ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வரலாறு என்பது மிகவும் பழமையானதாகும்.

கடல்வழியாக வீரமுனையில் அமர்ந்த காரணத்தினால் சிந்தாயத்திரைப்பிள்ளையார் என்ற பெயருடன் விளங்கும் சிந்தாயத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிசேகம் ஆரம்பமானது.

ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் இன்று எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலைமுதல் நடைபெற்றுவருகின்றது.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவானோர் இன்றைய எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி சபரிமலை சாஸ்தா பீட குருமுதல்வர், ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியர்கள் கும்பாபிசேக கிரியைகளை நடாத்துகின்றனர்.

நாளை வியாழக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் 10.32மணி வரையான சுபவேளையில் மஹாகும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.