மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் புகழ் பாடும் கற்பின் கானம் எட்டுப்பாடல்கள் வெளியீட்டு விழா நாளை 12.06.2022 திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஆலய முன்றலில் வைபவ ரீதியாக வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
இசை இளவரசர் அருணாகேதீசின் இசையமைப்பில் மட்டக்களப்பு கலைஞர்களின் பங்கேற்புடன் உருவாகியுள்ள கண்ணகை அம்மன் புகழ் பாடும் "கற்பின் கானம்" எட்டுப்பாடல்கள் வெளியீட்டு நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபையினர்.