கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.செல்வராஜா!!


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, பேராசிரியர் எம். செல்வராஜா இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்று (07) திகதி முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது.