செங்கலடி எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு!



செங்கலடி எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு!

(செங்கலடி நிருபர் சுபா)

செங்கலடி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மணல் மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் வழங்கப்படுவதாகவும் , இரவு வேளைகளில் மணல் மாபியாக்களுக்கு சூட்சபமான முறையில் சட்டவிரோதமாக எரிபொருள் வினியோகிப்பதாகவும் அதுமட்டுமன்றி  எரிபொருள் மக்களுக்கு வழங்கும் போது மணல் வியாபாரிகள் ஒவ்வொருவரும்  தமது தொழிலாளிகள் பலரை எரிபொருள் பெற  வரிசையில் நிக்கவைப்பதாகவும் இதனால் அப்பாவி மக்கள் பல மணி நேரம் காத்திருப்பதாகவும்,  ஜனாதிபதி செயலகத்திற்கு மக்கள் ஒன்றினைந்து இன்று பிற்பகல்  தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர். 

இவ் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் கவணம் செலுத்துவதாகவும்  பதுக்கல் தொடர்பிலும் மணல் வியாபாரிகளின் ஆதிக்கம் தொடர்பிலும்   மேலும் இரகசிய குழுவொன்றை ஈடுபடுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும்  மக்களுக்கு ஜனாதிபதி செயலகம் வாக்குறுதியளித்துள்ளது.

மேலும் மக்கள் இது தொடர்பான ஆதாரத்தகவல்களை தங்களுக்கு உடன் அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளனர்.