ஒரே நாளில் மீண்டும் மீண்டும் எரிபொருள் பெற்ற 5221 வாகனங்கள் அடையாளம்!!


ஒரே நாளில் குறுகிய காலத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மீண்டும் மீண்டும் எரிபொருளைப் பெற்ற 5,221 வாகனங்களை பொலிஸ் தலைமையகம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலியான Fuel IMC மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சில பாவனையாளர்களால் எரிபொருள் கொள்வனவு மற்றும் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புதிய செயலியை நாடு முழுவதும் உள்ள 1,420 நிரப்பு நிலையங்கள் பயன்படுத்துகின்றன. மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், ஒரு வாகனத்துக்கு மீண்டும் மீண்டும் எரிபொருள் நிரப்புவது குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி 1,450 வாகனங்களில் இவ்வாறு எரிபொருள் நிரப்பப்பட்டதை அவதானித்ததாக அவர் தெரிவித்தார்.