அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, பன்சாலிய பகுதியில் இன்று மாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
27 வயதுடைய இளைஞன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.