கதிர்காமம் செல்லும் பாதை யாத்திரியர்களுக்கு முஸ்லீம் இளைஞர்களின் உபசாரம்!!


யாழ்ப்பாணம் பருத்தித்ததுறையிலிருந்து கதிர்காமத்திற்குச் செல்லும் பாதை யாத்திரியர்களுக்கு தோப்பூர் பிரதேச முஸ்லீம் இளைஞர்கள் நேற்று மாலை குளிர்பானங்கள், பிஸ்கட்களை வழங்கி வைத்துள்ளனர்.

இச்செயற்பாடானது இன நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகின்றது.

நாட்டில் நிலவும் பொருளாதார கஸ்ரங்களுக்கு மத்தியில் குறித்த சமூக பணியானது நாம் எல்லோரும் இலங்கையர்களாய் ஒற்றுமையாய் வாழ்வோம் என்பதை எடுத்து காட்டுகின்றது.