முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இன்று வந்து அமருகிறார் புத்தர்!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கும் நிகழ்வு நீதிமன்ற தடையையும் மீறி இன்று நடைபெறுகின்றது.

இந்நிகழ்வில் பல நூறு பிக்குகள், அமைச்சர்கள், கடற்படை, வான்படை, தரைப்படையினர் மற்றும் பொலிசார்களும் பங்கேற்கின்றனராம்.

ஏற்கனவே நீதிமன்ற தடை உத்தரவு உள்ள நிலையில், நீதிமன்ற தடை உத்தரவினை மீறி பெரும் எடுப்பில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தமிழரின் நிலத்தை ஆக்கிரமிப்பதில் உறுதியாக இருக்கிறது அரசு.